ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. இது பொதுவாக ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி இருபாலருக்கும் பொதுவான பிரச்சினைதான். இது முகத்தின் அழகை முழுவதுமாக கெடுத்துவிடும். இந்த பிரச்சினையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு மேல் உள்ள தோலை எடுத்துவிட்டு அதை நன்றாக அரைத்து அந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள இடத்தில் தடவினால் ஒரு வாரத்தில் கருவளையம் குணமாகும். மஞ்சளுடன் தேங்காய் எண்ணை அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல செய்து கண்களுக்கு மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவும் போது கருவளையம் நீங்கும். கற்றாழையை எடுத்து அதன் உள்ளே உள்ள ஜெல்லை எடுத்து கண்களின் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறை பஞ்சில் தடவி கண்களுக்கு மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் கருவளையம் நீங்கலாம். சுத்தமான செக்கு விளக்கெண்ணெய்யை இரவு தூங்குவதற்கு முன்பாக இரண்டு துளிகள் கண்ணை சுற்றி தடவி மசாஜ் செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.