கண்களை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்தால் கொரோனாவை கண்டறியும் புதிய முறையை ஜெர்மனி நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது.
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
அதுமட்டுமன்றி மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனாவை மிக விரைவாக கண்டறியும் வகையில் பலவித கருவிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து கொண்டே வருகின்றன. அதன்படி கண்களை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்து செயலிக்கு அனுப்பி, கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய முறையை ஜெர்மனி நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது.
இந்த செயலிக்கு semic eye scan என்று பெயரிடப்பட்டுள்ளது. கண்ணில் உள்ள இளஞ்சிவப்பு அலர்ஜி அறிகுறி மூலம் கொரோனா தோற்ற இது உறுதி செய்கிறது. 70 ஆயிரம் பேரிடம் இதை சோதித்து உள்ளதாகவும், 95 சதவீதம் சரியாக உள்ளதாகவும் மூன்று நிமிடங்களில் இந்த சோதனையை செய்து முடிவை விரைவில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.