தமிழ்நாடு மின் தேவையை பூர்த்திசெய்யும் அளவிற்கு மின்வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதன் காரணமாக மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின்தேவை எவ்வளவு உள்ளதோ?..அதற்ககேற்றவாறு உற்பத்தி, கொள்முதல் போன்ற இரண்டையும் சமன்செய்து மின்வழித்தட கட்டமைப்பில் மின்சாரத்தினை எடுத்துசெல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்வெட்டு விவகாரத்தில் திமுக அரசு நடவடிக்கை “கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்” என்பதுபோல் அமைந்து இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கோடையில் மின்தட்டுப்பாடு அதிகரிக்கும் என்ற சூழ்நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே முதல்வர் ஸ்டாலின் இவ்விவகாரத்தில் தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.