பிரபாகரனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் மாவீரர் நாள் விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நகர்ப்புற உறுப்பினர்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் வழக்கம்போல தனித்து போட்டியிடுவோம். இந்தியாவில் பேரிடர் மேலாண்மை, நீர் மேலாண்மை என்பது இல்லை.
யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்ததன் பலன்தான் இன்று கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ளது. இப்படி யானைகளின் வழித்தடங்களை அழித்து விடுதி கட்டி வந்தால் இன்று யானை சாவதை நாம் பார்த்தோம். நாளை நாம் சாவதை பார்க்க யாரும் இருக்க மாட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்தது கண்டனத்துக்குரியது என்று பேசியுள்ளார்.