Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கண்டறியப்பட்ட பழமையான சோழர் கால கல்வெட்டு…. பின் ஆய்வாளர்கள் செய்த செயல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் வடதொரசலூர் ஏரிக்கரை அருகேயுள்ள பிடாரிஅம்மன் கோயில் வளாகத்தில் 800 வருடங்களுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இதை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், காப்பாட்சியர் ரஷீத்கான், நூலகர் அன்பழகன், பண்ரூட்டி இமானுவேல், ஆசிரியர் உமாதேவி போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கல்வெட்டு 5அடி நீளமும், 3.5 அடி அகலமும் கொண்டதாகும். அத்துடன் அந்த கல்லின் இரு புறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2-ம் குலோத்துங்க சோழனின் “பூமேவி வளர” எனும் மெய்க் கீர்த்தி முழுமையாக இந்த கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் கூறியிருப்பதாவது, எங்களது மையத்தின் சார்பாக சுமார் 2,500 வருடங்களுக்கு முந்தைய கண்ணாடி மணி உருக்கு உலைக்கலன் வீர பாண்டி கிராமத்தில் புலிக்கல் பகுதியிலும், கல்திட்டை (டால்மன்) திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள ஆதிச்சனூரிலும், அந்திலி கிராமத்தில் முதுமக்கள் தாழியையும் கண்டெடுத்து இருக்கிறோம். இப்பகுதி வரலாற்று சிறப்புமிக்க பகுதி என இந்த ஆய்வு வாயிலாக வெளிப்பட்டு வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த பகுதியில் தொல்லியல் அகழாய்வு நடத்தினால் இப்பகுதியின் தொன்மை வரலாறு வெளிப்படும் என்று அவர் கூறினார். இது தவிர்த்து பழமைவாய்ந்த அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |