நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அலட்சியத்துடன் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடுவதாலும் புதிய வைரஸ் மாறுபாடு காரணமாக மூன்றாவது அலை ஏற்படுவது உறுதி என சிஎஸ்ஐஆர் தெரிவித்துள்ளது. மேலும் ஆயுர்வேத மூலிகையான அஸ்வகந்தாவில்கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் ஆன்டி-வைரல் இருப்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இது நிரூபணம் ஆகும் பட்சத்தில் கொரோனா சிகிச்சையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என கூறியுள்ளது.