உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நிச்சயம் தோல்வியில் தான் முடியும் என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் போர் தொடர்பாக நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.” உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போரைத் தொடங்கி பெரிய தவறை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த போரில் நிச்சயமாக அவர் தோல்வி அடைவார். இந்த நிலையில் உக்ரைனிய மக்கள் தங்கள் தேசத்தை பாதுகாக்க அவர்களின் மூர்க்கத்தனமும், வலிமையும், உறுதியும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது” என்று கூறியுள்ளார்.