Categories
லைப் ஸ்டைல்

கண்டிப்பா… “சாப்பிட்டவுடன் இப்படியெல்லாம் செய்யாதீங்க”… உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு..!!

நன்றாக சாப்பிட்டவுடன் அறியாமல் செய்யும் சில செயல்களினால் நமது ஆரோக்கியம் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது. சாப்பிட்ட உணவு வேகமாக ஜீரணமாக வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் செயல்கள் சில நமது உடலுக்கு எதிர்மறையாக மாறி செரிமான மண்டலத்தை பாதிப்படையச் செய்கிறது. அவ்வாறு சாப்பிட்டவுடன் நாம் செய்யும் செயல்களில் எது நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது பற்றிய தொகுப்பு.

  1. சாப்பிட்ட பிறகு டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை நிறுத்துவது நல்லது. இரண்டிலும் தனித்தனி நன்மைகள் இருந்தாலும் அதனை சரியான நேரத்தில் குடித்தால் மட்டுமே நன்மை. அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எந்த உணவை சாப்பிட்டாலும் அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து காபி அல்லது டீ குடிப்பது தான் நல்லது என்று சுகாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
  2. சாப்பிட்ட பிறகு புகைபிடிக்கக் கூடாது ஆனால் பல ஆண்கள் இதனை தங்களது வாடிக்கையாக வைத்துள்ளனர்.
  3. சாப்பிட்ட பிறகு குளிப்பது நிச்சயம் கூடாது. குறைந்தது 30 நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும். சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக அதிகப்படியான ஆற்றல் தேவை. ஆனால் சாப்பிட்டவுடன் குளித்தால் அது ரத்தநாளங்களின் சரும ஓட்டத்தை நீரின் தாக்கத்தை சமாளிக்க திசை திருப்புகிறது.  இதனால் செரிமானம் ஆவதில் சிக்கல் உருவாகிறது.
  4. சாப்பிட்ட உடன் தூங்குவது என்பது மிக மிக மோசமான செயல் அதற்கு பதிலாக நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ நேரத்தை செலவிடலாம். தொலைக்காட்சி பார்த்தாலும் பிரச்சினையில்லை ஆனால் உடனடியாக தூங்குவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். சாப்பிட்டவுடன் படுத்தால் செரிமானத் சாறுகள் எதிர் திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கும். இதனால் சரியாக உணவு செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |