Categories
சினிமா தமிழ் சினிமா

கண்டிஷன்கள் போடும் பாலாஜி டீம்… ஏற்றுக்கொள்ள மறுக்கும் அர்ச்சனா டீம்… வெளியான முதல் புரோமோ…!!

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது .

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு ‘புதிய மனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அர்ச்சனா தலைமையிலான ரோபோட் அணிக்கும் பாலா தலைமையிலான மனிதர்கள் அணிக்கும் போட்டி நடைபெற்றது. மனிதர்களின் உணர்ச்சியான மகிழ்ச்சி, துக்கம், சோகம் ஆகியவற்றை ரோபோக்களிடமிருந்து வரவைக்க மனிதர்கள் அணி முயற்சித்தனர். இதில் அர்ச்சனாவின் தந்தை குறித்து நிஷா கேள்வி கேட்டு அர்ச்சனாவின் உணர்ச்சிகளை கொண்டுவர முயற்சித்தால் வீட்டுக்குள் பெரும் கலவரமே ஏற்பட்டது. என் தந்தை மரணம் உங்களுக்கு விளையாட்டா? என கதறி அழுது கூச்சலிட்டார் அர்ச்சனா.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் டாஸ்கின் இரண்டாம் பாகமாக அர்ச்சனா அணியினர் மனிதர்கள் அணியாகவும், பாலாஜி அணியினர் ரோபோ அணியாகவும் விளையாடவுள்ளனர். ஆனால் டாஸ்க் தொடங்கும் முன்னரே பாலாஜி அணியினர் ஒரு சில கண்டிஷன்கள் போட்டனர். அதாவது கிசுகிசு மூட்டுனாலோ , பிசிகல் டச் பண்ணுணாலோ பிரேக் ஆவோம்னு உங்களுக்கே தெரியும்.. என ரியோ சொல்லி முடிப்பதற்குள் மற்ற போட்டியாளர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். இதன் மூலம் நேற்று டாஸ்க் என்ற பெயரில் கொடுமைப்படுத்திய பாலாஜி அணியை அர்ச்சனா அணி பழிவாங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Categories

Tech |