Categories
சென்னை மாநில செய்திகள்

கண்டுக்காத கணவன்…. காண்டான மனைவி…. விபரீதத்தில் முடிந்த வீண் வம்பு…. பயங்கர சம்பவம்….!!!

சென்னையை அடுத்த அம்பத்தூரில் தேவராஜ் மற்றும் மேகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பூர்ணிமா தேவி என்ற மகளும் நவீன் ராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிடுவதற்காக தனது கணவரை மேகலா அழைத்துள்ளார். ஆனால் அதனை தேவராஜ் பொருட்படுத்தாமல் இருந்ததால் கடுமையாக கோபத்திற்கு உள்ளானார்.

இதையடுத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதனால் அலறிய மேகலாவை கண்டதும் அவரை காப்பாற்ற முயன்ற தேவராஜ் உடம்பிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சாப்பிடுவதற்கு அழைத்தபோது கணவன் அலட்சியமாக இருந்ததால் மனைவி தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |