பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கல்யாணமாகி ஒரு மாதம் முடிவடைந்த பிறகும் தற்போது வரை இவர்களுடைய திருமணம் பற்றிய பேச்சு தான் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரவீந்தரும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டார்கள். இந்நிலையில் ரவீந்தர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவி தனக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த பதிவுக்கு கேப்ஷனாக சொர்கம் பூமியில் தான் இருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில் பலரும் இதற்கு கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.