Categories
உலக செய்திகள்

கண்டெடுக்கப்பட்ட 2 பெண் சடலங்கள்… கல்லூரிக்கு சென்ற போது துயரம்… போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி …!!

கல்லூரிக்கு சென்ற சில மணி நேரங்களில் இரு மாணவிகள் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் உள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 18 வயதான ஜெனி மற்றும் Stephenie ஆகியோர் பல்கலைக்கழத்திற்கு சென்ற சில மணி நேரங்களில் மரணமடைந்துள்ளனர். இவர்களின் மரணங்கள் போதைப்பொருள் தொடர்பாக இருக்கலாம் என்று காவல்துறையினர்  எச்சரித்துள்ளனர். இதையடுத்து மாணவர் நதானியேல்(21) என்பவர் Northumbria பல்கலைகழகத்தில் அதே வார இறுதியில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், ஜெனி மற்றும் நதானியேல் ஆகியவர்களின் மரணத்திற்கான காரணம் என்ன? என்று காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இறந்த மூவருமே பல்கலைக்கழகத்திற்கு சென்ற அடுத்த சில மணி நேரங்களில் தங்களுடைய நண்பர்களுடன் வெளியில் சென்று பானம் அருந்தியுள்ளனர். அதன் பிறகு தான் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரணமடைந்த இரு மாணவிகளின் சடலங்களும் அவர்களது பெற்றோர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில் மாணவிகள் இருவரும் சக்திவாய்ந்த ketamine என்ற ஒரு வகையான போதை மருந்தை பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |