உயர்நீதிமன்றம் கண்டெய்னர் லாரி விபத்துகளைப் பற்றி ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சாலைகளில் கண்டைனர் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கண்டெய்னர் லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான எடையை ஏற்றி செல்லுவதால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து விபத்துகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பற்றி ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு ஆணையிட்டார்.