பாரதிகண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கருத்து வேறுபாடு காரணமாக பாரதி, கண்ணம்மா இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது . அதில் மனம் வருந்தி பேசிய பாரதி, மீண்டும் கண்ணம்மாவுடன் இணைந்து வாழ போகிறேன் என்று தனது குடும்பத்தினரிடம் கூறுகிறார். தற்போது இந்த புரோமோ வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.