நடிகை குஷ்பூ தான் கண் கண்ணாடி போடாததால் கொடியை மாற்றி பதிவிட்டதாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை குஷ்பூ குடியரசு தனது டுவிட்டர் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த பதிவில் இந்தி தேசிய கொடிக்கு பதிலாக நைஜர் நாட்டுக் கொடியை பதிவிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதையடுத்து இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய விமர்சனத்தை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தான் கண் கண்ணாடி(ரீடிங் கிளாஸ்) அணியாமல் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதால் அந்த தவறு நேர்ந்து விட்டதாக சொல்லி அதற்காக குஷ்பு தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறார்.