சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதி இணைந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் பப்லு, நிமிஷிகா, ராகுல் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கண்ணான கண்ணே சீரியலில் காஜல் பசுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://www.instagram.com/p/CUbR8e4hjNA/
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த சீரியலில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கண்ணான கண்ணே சீரியல் படப்பிடிப்பின் போது பப்லு, காஜல் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது.