பெரம்பலூரில் பேருந்து மோதி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் மெயின் ரோட்டில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேம்பு (75) என்ற மனைவி இருந்தார். இவர் தனது வீட்டின் எதிரே உள்ள சாலையில் கடந்த 5-ம் தேதி ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மினி பேருந்து ஒன்று வேம்பு மீது வேகமாக மோதியது.
இதில் வேம்பு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.