மதுரை ஆரப்பாளையத்தில், மின்கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள், கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அப்போது, “உங்க அப்பாவிற்கு (கருணாநிதி) பேனா சிலை அமைக்க ரூ.80 கோடி செலவு செய்றீங்க. ஆனால் வரி விதிப்பது மட்டும் யாருக்கு… மக்களுக்கு” என பிரேமலதா காட்டமாக பேசினார்.
Categories