Categories
உலக செய்திகள்

“கண்ணீர் விட்டு அழுத்த ரஷ்ய வீரர்”…. “நெகிழ்தில் ஆழ்த்திய உக்ரைனிய மக்கள்”…. வைரலாகும் வீடியோ….!!

உக்ரைனில் சரணடைந்த ரஷ்யா வீரர்களுக்கு உணவு டீ, உணவு கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது 8-வது நாளாக முழுவீச்சில் தாக்குதல் நடந்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கீவ் நகர் அருகே ரஷ்ய வீரர்கள் சிலர் தனது ஆயுதங்களை கைவிட்டு உக்ரைன் வீரர்களிடம் சரணடைந்தனர்.

இதற்கிடையில் உக்ரைன் மக்கள் சரணடைந்த ரஷ்ய வீரர்களுக்கு டீ, உணவு கொடுத்தனர். மேலும் உக்ரைனின் பெண் ஒருவர் ரஷ்ய வீரரிடம் அவர் தாயின் தொலைபேசி எண்ணை பெற்று அவருக்கு போன் செய்து கொடுத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து தனது தாயிடம் பேசிய அந்த ரஷ்ய வீரர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தங்களை தாக்க வந்த ரஷ்ய வீரர்களுக்கு உணவு கொடுத்த உக்ரைன் மக்களின் செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |