துல்கர் மற்றும் அவரது நண்பரான ரக்ஷன் ஆன்லைனில் பொருட்களை வாங்கி சின்னத் திருட்டு தனங்கள் செய்து மற்றவர்களுக்கு பொருட்களை விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர் இந்நிலையில் ரித்து வர்மாவின் மீது காதல் கொண்ட பெண்கள் துல்கர் காதலை சொல்ல ரிது வர்மா ஏற்றுக்கொள்கிறார் அதே போன்று ரக்ஷனுக்கும் ரித்து வர்மாவின் தோழியான நிரஞ்சனி மீது காதல் வருகிறது.
அனைவரையும் ஏமாற்றி பணம் சம்பாதித்தது போதும் என கோவாவிற்கு சென்று காதலிகளுடன் வாழ்க்கையைத் தொடங்கலாம் என நண்பர்கள் இருவரும் முடிவெடுக்க இந்நிலையில் இவர்களது திருட்டு தனத்தால் பாதிக்கப்பட்ட காவல் அதிகாரி கௌதம் மேனன் இவ்விருவரையும் பிடிக்க தீர்மானம் செய்கிறார்.
கோவாவிற்கு சென்ற பின்னரே காதலிகளின் உண்மை சுயரூபத்தை அறிகின்றனர் நண்பர்கள் இருவர் அதன் பின்னர் அங்கு என்ன நடக்கிறது என்பதே இத்திரைப்படத்தின் மீதிக்கதை
ரொமான்டிக் மற்றும் ரில்லர் படம் புதிது இல்லை என்றாலும் வெளிப்படுத்திய விதத்தில் இயக்குநர் தேசிங் பெரியசாமி பாராட்டு பெறுகிறார். சரியான அளவில் காதல், நகைச்சுவை மற்றும் திரில்லர் ஆகியவற்றை இயக்குநர் கச்சிதமாக கொடுத்துள்ளார்.
படத்திற்கு இசை பெரிதும் பக்கபலம் கொடுத்துள்ளன. படம் விறுவிறுப்பாக இருப்பதால் அதன் நீளம் பெரிதாக தெரியவில்லை. துல்கர் சல்மானும், ரித்து வர்மாவும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்கள். கவுதம் மேனன் நடிப்பில் அசத்தியுள்ளார். அவர் படங்களை இயக்குவதோடு அவ்வப்பொழுது நடிகர் அவதாரமும் எடுத்தால் சிறந்த முறையில் இருக்கும்.