இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் பல மாதங்களாக காற்று மாசு அதிகரித்து பெரும் பிரச்சினையாக நிலவுகிறது.இதற்கு வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவில் இருக்கிறது. இதனிடையில் காற்று மாசு அதிகரிப்பதால் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் பல்வேறு பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப் பட்டதால் காற்று மாசு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் நாடு முழுதும் புகைமூட்டமாக காணப்பட்டது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பகலிலே விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை உருவாகி உள்ளது. அதைத்தொடர்ந்து நேற்று காலை டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 499 ஆக இருந்தது என்று வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அதில் டெல்லியில் உள்ள ஆனந்த விகார், ஜகாங்கிர்புரி, சாந்தினி சவு, லோடி சாலை மற்றும் இந்திரா காந்தி விமான நிலையம் ஆகிய 15 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து நிலையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் டெல்லியை ஒட்டியுள்ள நோய்டா, குருகிராம், காசியாபாத் மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மிக மோசமானதாக இருந்தது. மேலும் டெல்லியில் இந்த ஒரு வாரம் இந்த நிலை நீடிக்க வாய்ப்புள்ளது என்று வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.