இளம்பெண் பெற்றோரை உதறிவிட்டு 10ம் வகுப்பு படித்தவருடன் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவர் பொறியியல் படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக பெங்களூரை சேர்ந்த சுந்தர்(22) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சமூகவலைதளத்தில் துவங்கிய அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சுந்தர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு சமையல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் மீது கொண்ட அளவுகடந்த காதலால் மோகனப்பிரியா வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச்சென்ற தன்னுடைய மகளை காணாத மோகன பிரியாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் மோகன பிரியாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவரின் பெற்றோருடன் சென்னைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் மோகன பிரியா பெற்றோருடன் செல்ல மறுத்துள்ளார். இதையடுத்து தன் மகளை சுந்தர் கடத்தி வந்ததாக மோகன பிரியாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் மோகனப்பிரியா அவருடைய காதலுடன் காவல் நிலையத்திற்கு சென்று தான் மேஜர் என்பதால் என்னுடைய காதலனுடன் தான் செல்வேன் என்று கூறி தனது படிப்பையும், பெற்றோரையும் உதறிவிட்டு சுந்தருடன் சென்றுள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அவருடைய பெற்றோர் கண்ணீருடன் தங்களை வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.