Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்பார்வை குறைபாடு…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தவறுதலாக தண்ணீருக்கு பதிலாக மண்ணெண்ணையை குடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி கிராமத்தில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார், இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில் மூதாட்டி தவறுதலாக தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்துவிட்டார்.

அதன்பின் வாந்தி எடுத்து சிரமப்பட்ட மூதாட்டியை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |