தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் மின்சார ஆற்றல் உற்பத்தி, இயக்க படங்கள், ஒலிப்பதிவு, வெகுஜன தொடர்பு போன்ற துறைகளில் பல சாதனைகள் புரிந்துள்ளார். கடந்த 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி அமெரிக்காவின் மிலன் ஓஹியோவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் கடந்த 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் இருக்கும் மேற்கு ஆரஞ்ச் பகுதியில் உயிரிழந்தார். இந்நிலையில் தாமஸ் ஆல்வா எடிசனின் கடினமான உழைப்பினால் மட்டுமே அவர் இறந்த பிறகும் கூட அவருடைய பெயர் இன்றுவரை உலகத்தில் நிலைத்து நிற்கிறது. இவர் பல இரவுகள் தூங்காமல் கடுமையாக வேலை பார்ப்பார்.
இவர் தன்னுடைய கையில் ஒரு உலோக பந்தை எப்போதுமே வைத்திருப்பார். இவர் இரவு நேரத்தில் வேலை பார்க்கும் போது இந்த உலக பந்தை கையில் வைத்திருப்பார். ஏனெனில் இவர் ஒரு வேலை வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென தூங்கி விட்டால் அந்த பந்து கீழே விழும்போது சத்தம் கேட்கும். அந்த சத்தம் கேட்டவுடன் மீண்டும் தாமஸ் ஆல்வா எடிசன் தூக்கத்திலிருந்து எழும்பி தன்னுடைய வேலையை தொடங்கி விடுவார். மேலும் தாமஸ் ஆல்வா எடிசன் தூங்காமல் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய கையில் பந்தை வைத்து இருக்கிறார். இவர் இப்படி இரவு பகல் பார்க்காமல் கடினமாக உழைத்தால் மட்டுமே இன்று உலகத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.