மதுரையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மதுரை மாவட்டம் குன்னம்பட்டியில் மீன் பிடிக்கும் திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ராஜகிரி கண்மாயில் மீன் பிடிக்கும் திருவிழா நடைபெற்றது. இக்கண்மாயில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்த மழையில் நிரம்பியதில் பொதுமக்கள் மீனை பிடித்தனர்.
இதற்கிடையே கிராமத்து முக்கியஸ்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெள்ளைத் துண்டை அசைத்து இத்திருவிழாவை தொடக்கி வைத்துள்ளனர். இதனையடுத்து கரையில் ரெடியாக நின்று கொண்டிருந்த பொதுமக்கள் கண்மாய்க்குள் இறங்கி கட்லா, கெண்டை, கெளுத்தி உட்பட சில வகை மீன்களை பிடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.