ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கோசாகுளம் நாராயணன் நகரில் பட்டாபிராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் பட்டாபிராமன் அப்பகுதியில் இருக்கும் கண்மாய் அருகே நின்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி தண்ணீரில் விழுந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பட்டாபிராமனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பட்டாபிராமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.