Categories
மாநில செய்திகள்

கண்முன்னே குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகள்….. சோகத்தில் தந்தை தற்கொலை…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

ஊத்தங்கரையைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் மீனாட்சி தம்பதியினருக்கு ஹரிப்ரியா என்ற மகளும், யஸ்வந்த் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் நேற்று குளத்தில் மீன் பிடிக்க சென்ற போது தவறி விழுந்து குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற தந்தை முயற்சி செய்தும் முடியவில்லை. அதனால் தனது கண் முன்னே பிள்ளைகள் உயிர் இழந்த துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுத லோகேஸ்வரன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்ள முடிவு செய்து, லோகேஸ்வரன் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்துள்ளார்.

அதன்பிறகு தனது மனைவி மீனாட்சியையும் குடிக்க கொடுத்தார். அதனை குடிக்க முயன்ற போது லோகேஸ்வரன் கடைசி நேரத்தில் கட்டி விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து மீனாட்சி சத்தம் கேட்டதை அடுத்து, லோகேஸ்வரனைஅங்கிருந்து சிலர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஸ்வரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |