கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது சரியல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
இந்தியாவில் 39 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மிதமான கொரோனா பாதிப்பு கொண்ட நோயாளிகளை வைத்து பிளாஸ்மா சிகிச்சை பயன்பாடு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. அதில் பிளாஸ்மா சிகிச்சை பெறாதவர்களுடன் ஒப்பிடுகையில் பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களுக்கு நோயின் தீவிரத்தை குறைப்பதிலோ மரணத்தை தவிர்ப்பதிலோ அந்த சிகிச்சையை எந்த வகையிலும் உதவவில்லை என்று தெரியவந்தது.
சீனா, லதர்லாந்த் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் பிளாஸ்மா சிகிச்சையால் குறிப்பிடத்தக்க அளவுக்கு பலன்கள் இருக்காது என்று கண்டறியப்பட்டது. எனவே கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது ஏற்புடையது அல்ல என ICMR கூறியுள்ளது.