நிறைய பேருக்கு இருக்கக்கூடிய கண் கருவளையத்தை மாற்றுவதற்கான இரண்டு முறைகள்..!இன்றைக்கு பலரின் அழகைக் கெடுப்பதற்கு இருக்கக்கூடிய இந்த பிரச்சனை வருவதற்கு காரணம்,
சரியான தூக்கம் இல்லாதது,
சிலபேருக்கு விட்டமின் குறைபாடு,
செல்போன் அதிகமாக பயன்படுத்துவது
கேம்ஸ் விளையாடுவது
அப்படி வரக்கூடிய கண் கருவளையத்தை எப்படி சரி செய்வது, அது இருந்த இடமே தெரியாத வகைக்கு எப்படி வெண்மையாக்குவது.?
முதல் முறை:
தயிர் – 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி- கால் ஸ்பூன்
இவை இரண்டையும் நன்றாக கலந்து கண் கருவளையம் இருக்கும் இடத்தில் நன்றாக போட்டுவிட்டு ஒரு 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள் இதுபோல தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கண் கருவளையம் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு மறைந்துவிடும்.
இரண்டாவது முறை:
கற்றாலை ஜெல் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
இவை இரண்டையும் கலந்து கண்ணில் கருவளையம் இருக்கும் இடத்தில் போட்டு பத்து நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இப்பொழுது உங்கள் கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும் தினமும் ஒரு 10 நிமிடம், கண்களின் அழகை பெறுவதற்கு ஒதுக்குங்கள்.