Categories
தேசிய செய்திகள்

கண் கலங்கிய பிரதமர்! நெகிழ்ந்த குலாம் நபி ஆசாத் …!!

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி புகழ்ந்து பேசிய போது கண்கலங்கினார்.

காங்கிரஸின் மாநிலங்களவை தலைவரான குலாம் நபி ஆசாத் பதவி காலம் இந்த கூட்டத்தோரோடு முடிவடைகிறது. அவருடன் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 3 எம்பிகளின் பதவி காலம் முடிவடைகிறது. அவர்கள் 4 பேருக்கும் பிரியாவிடை கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி அவையில் பேசினார். அப்போது குலாம்நபி ஆசாத் காஷ்மீரில் இருந்த போது குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளிடம் சிக்கி கொண்டதாகவும், அப்போது குலாம் நபி ஆசாத் தமக்கு மிகுந்த உதவி புரிந்ததாகவும், தான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறினார். தொடர்ந்து தீவிரவாதிகளிடம் சிக்கி அந்த பயணிகளை தனது குடும்பத்தில் ஒருவர் என நினைத்து குலாம் நபி ஆசாத்தை உதவி செய்ததாகவும் மோடி கூறியது கண்களில் கண்ணீர் பெருகியது.

 

 

சிறிது நேரம் பேசாது நின்ற மோடி, தண்ணீர் பருகி மீண்டும் பேசத் தொடங்கினார். குலாம்நபி ஆசாத்துக்கு தலைகணம் இருந்ததே இல்லை என்றும், நாடாளுமன்றத்திற்குள் தாங்கள் ஒரு குடும்பமாக பழகி வருவதாகவும் உணர்ச்சிவசத்துடன் தெரிவித்தார். என்னதான் எதிர்க்கட்சியாக இருந்தாலும், கொள்கையில் வேறுபாடுகள் இருந்தாலும், கட்சியில்  பாகுபாடு இன்றி மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி குலாம்நபி ஆசாத் ஒய்வு  காலம் குறித்து பேசியபோது பிரதமர் மோடி கண்கலங்கியது எதிர்க்கட்சிகள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |