முக.ஸ்டாலினின் அறிவிப்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார்.
அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்தையில் தொய்வு ஏற்படுத்தும் நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பேச்சுவார்த்தையும் திமுகவை ஒப்பீடு செய்தால் முதலில் கூட்டணி பேச்சுவார்தை நடத்தி பாமகவுக்கு 23சீட் கொடுத்து பகிரங்கமா அறிவித்துள்ளோம். திமுக கூட்டணியில் மணப்பூசல் உள்ளே இருக்கு.எங்களை பொறுத்தவரை சுமுகமாக போய்க்கொண்டு இருக்கின்றது. உரிய நேரத்தில் தலைமை கழகம் அறிவிக்கும்.
தேமுதிக ராஜ்ய சபா சீட் கேட்பது என்பது அனுமான கேள்வி. இப்போதைக்கு தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுகின்ற சூழ்நிலையில கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருக்கிறது. திமுக கூட்டணி வழு என்று அவர்களுக்கு அவர்களே சொல்லி கொள்ள வேண்டியது தான். தமிழ்நாட்டு மக்கள் வரணும்னு சொல்லலியே.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் வலுவாக தமிழ் நாட்டை ஆளக்கூடிய சக்தின்னு பார்த்தா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி தான். எல்லா இடங்களையும் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையோடு மீண்டும் அண்ணா திமுக ஆட்சி மலரும். 10 வருஷத்துக்கான செயல் நோக்கம் திட்டத்தை கொடுத்துட்டேன்னு என ஸ்டாலின் சொல்கிறார்.
அன்னைக்கு புரட்சி தலைவி அம்மா அவர்கள் விஷன் 2023என்ற ஒரு தொலைநோக்கு செயல்திட்டத்தை தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கினார். இதன் அடிப்படையில் இன்றைக்கு அடிப்படை கட்டமைப்பு பவசதியில் இருந்து எல்லா வசதிகளும் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அப்படி இருக்கும் போது இப்பொது தான் அவருக்கு ஞானோதயம் வந்துருக்கு. கண்கெட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் இதுதான் திமுக என அமைச்சர் விமர்சித்தார்.