இன்று தை அமாவாசை என்பதால் கண் திருஷ்டி கழிப்பது மூன்று மடங்கு நன்மைகளை குடும்பத்திற்கு தரும்.
தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். இதனை புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நம் முன்னோர்களை வழிபடுவது அவசியமாகிறது. இந்த அமாவசை நாளில் நமது பித்ருக்கள் வந்துசெல்வர் எனக் கூறுவர்.
அந்த வகையில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யும் போது பித்ரூ தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல் அமாவாசை தினத்தில் கண் திருஷ்டி கழிப்பது உகந்தது. இன்று கண் திருஷ்டி கழிப்பது மும்மடங்கு பலனைத் தரும் என்பார்கள்.
பூசணிக்காய் கொண்டு முதலிலும் அடுத்து எலுமிச்சை கொண்டும் இதன் பின்னர் தேங்காய் கொண்டும் சூடமேற்றி திருஷ்டி சுற்றிப் போடவேண்டும். தை அமாவாசையில் திருஷ்டி கழிப்பது மகத்தானது. இதன்மூலம் தடைகள் அனைத்தும் விலகும். இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கும்.