சிலர் வீட்டில் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக கண் திருஷ்டி பிள்ளையார்படம் வைப்பது வழக்கம். அவ்வாறு பிள்ளையார் படத்தை வைக்கும் போது சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். கண் திருஷ்டி பிள்ளையார் படத்தை வீட்டில் தலை வாசலுக்கு எதிராக, வீட்டில் உழைப்பவர்களின் கண்ணில் படும்படி வைப்பது நல்லது. அப்படி வைத்தால் வீட்டில் சிலர் பொறாமை கொண்டு, தீய எண்ணத்துடன் நுழையும் போது அதன் தீய சக்திகளை தடுத்து அவர் வீட்டை பாதுகாக்கும், சிறப்பான சக்தியுடன் இருப்பார்.
இந்த கண் திருஷ்டி விநாயகர் வீட்டின் முகப்பு வாயில் வைக்கும்போது ஜோடியாக வைக்க வேண்டும். அதில் ஒன்று நுழைவாயிலை பார்த்தபடியும் மற்றொன்று அதற்கு எதிர்ப்புறமாக பார்த்தபடியும் வைப்பது நல்லது. ஏனென்றால் எந்த ஒரு கடவுள் சிலையாக இருந்தாலும் அதன் பின்புறம் நம் வீட்டை பார்த்தால் நமக்கு வறுமை வந்து சேரும். அதனால் தான் அதனை ஈடு செய்யும் வகையில் மற்றொரு சிலையை எதிர்திசையில் வைக்கிறோம்.