முதுமலையில் 7 மாதங்களாக அளித்த தொடர் சிகிச்சைக்குப் பிறகு சேரன் யானையின் கண் பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மே மாதம் யானையை குளிக்க வைக்கும் பொழுது பாகன் குச்சியால் அதனை தாக்கியபோது யானையின் வலது கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் பாகனை சம்பந்தப்பட்ட வனத்துறையினர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர். இதையடுத்து நடந்து செல்வது கூட சிரமப்பட்ட யானை வனத்துறையினரின் தொடர் சிகிச்சை காரணமாக தற்போது வலது கண் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது.
இதனால் யானை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கால்நடை மருத்துவ ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளதாவது தற்போது 70 முதல் 80 சதவீதம் வரை மட்டுமே யானையின் பார்வைத்திறன் கிடைத்துள்ளது. நூறு சதவீதம் கிடைக்கும் வரை சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.