கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனோ தானோ வென்று விட்டுவிட்டால்தான் கண்பார்வைக்கு மிகவும் பிரச்சனையாகிவிடும். ஒரு விஷயத்தை பார்த்து ரசிப்பதற்கு நமக்கு கண்கள் மிகவும் முக்கியம். அப்படி கண்கள் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் கண் தெரியாதவர்கள், கண்களில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் என அனைவரும் கருப்பு கண்ணாடியை ஏன் அணிகிறார்கள்? அது எதற்கு என்று உங்களுக்கு தெரியுமா?
கண் பார்வையற்றவர்களால் காட்சிகளைத் தான் காண முடியாது. ஆனால், ஒளியை உணர முடியும். பார்வையுடையவர்களை விட பார்வையற்றவர்களின் விழித்திரை எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியது. அதனால் பிரகாசமான ஒளி பார்வையற்றவர்களைச் சுலபமாக பாதிக்கும். கண் தெரியாதவர்களின் கண்கள் சூரிய வெளிச்சம் அல்லது லைட் வெளிச்சத்தில் மிகவும் உணர்வு திறன் குறைவாக இருக்கும். அவர்கள் கண்ணாடி போடாமல் சாதாரணமாக வெளியில் செல்லும் போது சூரிய வெளிச்சம் அவர்களின் கண்களில் படும். இதனால் கண் கூச்சம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும். விழித்திரையின் மீது விழுகின்ற பிரகாசமான ஒளிக்குத் தடுப்புச் சுவராக கருப்புக் கண்ணாடி செயல்படுகிறது. அதனாலேயே பெரும்பாலான பார்வையற்றவர்கள் கருப்புக் கண்ணாடியை அணிகிறார்கள். நாங்கள் பார்வையற்றவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் ஓர் அடையாளமாகவும் கருப்புக் கண்ணாடி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் கண் தெரியாதவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்துள்ளார்கள். இதை போட்டால் அவர்கள் வெளியில் செல்லும் போதும் அவர்களுக்கு சூரிய ஒளி பட்டால் எரிச்சல் ஏற்படாது.