திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தேரி மற்றும் கலாசிபாளையம் மலைவாழ் பெண்களின் மேம்பாட்டிற்காக தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் பி.என் சுரேஷ் வரவேற்று, காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இதனை அடுத்து குத்து விளக்கு ஏற்றி தேனீ வளர்ப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல துணை தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எஸ். பாண்டே தேனீ வளர்ப்பு குறித்து தெளிவாக பேசியுள்ளார். இதனையடுத்து சிறப்பு அழைப்பாளரான கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் பயிற்சி பெற்ற 20 பெண்களுக்கும் 10 பெட்டிகள் வீதம் 200 தேனீ வளர்க்கும் பெட்டிகள் மற்றும் உபகரணங்களை வழங்கியுள்ளார். இதில் ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.