சென்னை ஆளுநர் மாளிகையிள் இன்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பதவியேற்ற பிறகு தமிழக ஆளுநர் என்.ஆர். ரவி பதவி பிரமாணத்துடன் ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது உதயநிதிக்கு கரு.பழனியப்பன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கதறியவர்களுக்கு தெரியும், ஸ்டாலினை விட உதயநிதி ஆபத்தானவர் என்று. கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துகள் சின்னவரே” என்று பதிவிட்டுள்ளார்.