இணையத்தில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி காண்போரை நெகிழ வைக்கிறது. அவ்வகையில் விமானத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் செய்யும் சேட்டைகள் நம்மை மெய்மறக்க செய்து விடும்.ஆனால் அழுது கொண்டிருக்கும் குழந்தையை நான் சமாதானம் செய்வது என்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்தச் செயலை வெற்றிகரமாக விமான ஊழியர் ஒருவர் செய்து பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
குழந்தையின் தந்தை ஜீவன் வெங்கடேஷ் என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் விமான ஊழியர் நீல் மால்கம் என்பவர் குழந்தையை தூக்கி தனது தோளில் போட்டுக்கொண்டு ஒரு கையால் குழந்தையின் முதுகு பக்கத்தில் மெதுவாக தட்டிக் கொடுத்து விமானத்திற்குள் அங்கும் இங்குமாக மெதுவாக நடந்து கொண்டே இருக்கிறார். அந்த செயலை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க