Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் கோட்டையூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணேசன் அந்த சிறுமியை திருப்பத்தூர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வைத்து அந்த  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுக்குறித்து சிறுமி தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த  சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணேசனின் மீது  புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |