சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல கருங்குளம் கிராமத்தில் தொழிலாளியான பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலசுப்பிரமணியன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்பிரமணியனை கைது செய்தனர். இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமார் பாலசுப்பிரமணியனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறையில் இருக்கும் பாலசுப்பிரமணியனுக்கு சிறை அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.