சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமிக்கும் அதே பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த சந்திரசேகர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து சந்திரசேகர் அந்த சிறுமியை வெளி ஊருக்கு அழைத்து சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சந்திரசேகரை வலைவீசி தேடி வருகின்றனர்.