Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கதறி அழுத சிறுமி”…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தூய்மை பணியாளரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் சிவராமன் நகரில் தூய்மை பணியாளரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர்  அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 8-ஆம் வகுப்பு படிக்கும்  சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை   போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |