சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள வயலூர் பகுதியில் விஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசேகரன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஞானசேகரன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஞானசேகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.