மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனம்பட்டியில் கார்த்திக் ராஜா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.