Categories
மாநில செய்திகள்

“கதவின் கைப்பிடியோடு போராடிய பூனை”… செம்ம க்யூட் … வைரலாகும் வீடியோ…. குவிந்து வரும் லைக்ஸ்….!!!!!!!!!

பொழுது போக்காகவே வீட்டு விலங்காக இருந்தாலும் சரி காடுகளில் வாழும் விலங்காக இருந்தாலும் சரி அவற்றிற்கு ஒரே இடத்தில் அடைத்து வைப்பது பிடிக்காத ஒன்று ஆகும். அதில் விலங்குகள் மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் ஒரு இடத்திலேயே அடைத்துக் கொண்டிருப்பது பிடிக்காத ஒன்று. இங்கு ஒரு வீடியோவில் வீட்டிற்குள்  அடைக்கப்பட்டிருக்கும் பூனை ஒன்று மெதுவாக ஜன்னல் கதவை திறந்து கொண்டு வெளியேறும் காட்சி இணையதளத்தில் வைரலாக பரவியுள்ளது.

இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பார்த்து ரசித்து வருகின்றார்கள். மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட வீட்டில் வளர்க்கப்படும் இதுபோன்ற பூனைகள் பலர் ரசிக்கும்படியான சில விஷயங்களை செய்து பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது.ட்வீட்டரில் யோக்  என்கின்ற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பூனை ஒன்று வீட்டிற்குள் இருக்கின்றது அந்த பூனை கைப்பிடி ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஏதோ செய்வது போல் முதலில் தோன்றுகின்றது.

இதனை முழுமையாக பார்த்த பின்தான் தெரிந்தது அந்த பூனை வீட்டை விட்டு வெளியேற தான் அந்த கதவின் கைப்பிடியோடு போராடி உள்ளது என்று. பூனை முயற்சி  செய்து வழியாக கைப்பிடியை பிடித்து ஜன்னலை திறந்து வெளியே செல்கின்றது. இந்த வீடியோ உடன் கேப்ஷனாக நான் வெளியே செல்கிறேன் சிறிது நேரம் கழித்து திரும்பி வருகின்றேன் என்று பதிவிட பட்டிருக்கின்றது. சில நிமிடங்களே உள்ள இந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேறியதும் பல்லாயிரக்கணக்கான இணையதள வாசிகள் பார்த்து ரசிக்க வைக்கின்றன. மேலும் இந்த வீடியோவிற்கு  அதிகமான லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.

Categories

Tech |