Categories
தேனி மாவட்ட செய்திகள்

கதவு திறந்து வச்சுட்டு தூங்கினா இப்படித்தான் நடக்குமோ…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

தேனி மாவட்டத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவரது மனைவி நிவேதா ஆவார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் வீட்டிலிருக்கும் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வந்த மர்ம நபர் நிவேதா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிவேதா திருடன் என்று கத்திக் கூச்சலிட்டுள்ளார். அப்போது கணவர் கண்ணன் மர்ம நபரை பிடிக்க முயன்றபோது அவரை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளன். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Categories

Tech |