தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருபவர் கல்யாணி. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் நடிகை சதாவின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு சின்னத்திரை பக்கம் நடிக்க சென்ற கல்யாணி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் ஆகிய சீரியல்களில் நடித்தார். பின்னர் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கல்யாணி ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார்.
அதில் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு எல்லோரும் வருஷம் முடியப்போகுதுனு சந்தோஷமாக இருப்பீர்கள். ஆனால் நான் அன்றைய தினம் சந்தித்த விஷயம் பெரிய துக்கமான விஷயம். ஒரு சாதாரண நாளாக ஆரம்பித்து என் வாழ்வின் மிக கொடூரமான நாளாக மாறியது அந்த நாள்தான். என் அம்மாவை ஜிம்மிற்கு அழைத்துச் செல்ல வீட்டு வாசலில் மணியை பலமுறை அடிதேன். ஆனால் கதவு திறக்கவில்லை. எனக்கு பதற்றம் அதிகமானதால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே ஓடினேன். அப்போது என் அம்மா தூக்கில் தொங்கியபடி இருந்தார். அம்மா தற்கொலை செய்தபோது எனக்கு 23 வயது. அன்று முதல் என் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. என் அம்மா சிறந்த தோழி, அவள் இல்லாத உலகத்தை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு இணையதளத்தில் வைரலாக பரவி ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.