கோவையில் கதவைத் திறந்து வைத்து தூங்குபவர்கள் வீடுகளை குறிவைத்து கும்பலொன்று கைவரிசையை காட்டி வந்துள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக அதிகாலை நேரங்களில் கதவை திறந்து வைத்து தூங்குபவர்களின் வீடுகளுக்குள் சென்று செல்போன்களை திருடி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் வந்த நிலையில் இந்த திருட்டு கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையயடுத்து தனிப்படை போலீசார் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேரும் ஒரே கும்பல் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி சௌரியம்மாள் அவருடைய தம்பிகளான ரமேஷ் மற்றும் ஆனந் ஆகிய 4பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.