வீட்டில் நகை மற்றும் செல்போனை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள ராயபாளையம் கிராமத்தில் ராஜேந்திரன்-ராமுத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காற்றுக்காக வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 4 பவுன் தங்க நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனை அடுத்து மறுநாள் காலை நகை மற்றும் செல்போன் காணாமல் போனதைக் கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.