Categories
சினிமா தமிழ் சினிமா

கதிர், நரேன், நட்டி இணையும் ‘யூகி’… மிரட்டலான மோஷன் போஸ்டர் ரிலீஸ்…!!!

கதிர், நரேன், நட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள யூகி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் ஸாக் ஹரீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யூகி. இந்த படத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, ஆத்மியா, பவித்ர லட்சுமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வினோதினி, முனிஸ்காந்த், ஜான் விஜய், பிரதாப் போத்தன், பிந்து சஞ்சீவ், அஞ்சலி ராவ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் யூகி படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |